அந்த லிங்க்-யை தொட்டிங்க மோசம் போயிடுவீங்க! எச்சரிக்கும் போலீசார்! - Seithipunal
Seithipunal


அறிமுகம் இல்லாத நபர்களிடமிருந்து புத்தாண்டு வாழ்த்துக்கள் ஆப் லிங்க் வந்தால் அதை ஓபன் செய்ய வேண்டாம் அதன் மூலம் உங்களது தகவல்கள் திருட வாய்ப்புள்ளது என்று காவல்துறையை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விடுத்துள்ள விழிப்புணர்வு பதிவில், "தற்போது இணையதளத்தில் செயல்பட்டு வரும் புத்தாண்டு வாழ்த்து App (apk file) மோசடி அனைத்து இடங்களிலும் நடைபெற்று கொண்டு இருக்கிறது.

மோசடி நடைபெறும் விதம்:

உங்களது வாட்ஸப் எண்ணிற்க்கு அறிமுகமில்லாத எண்ணிலிருந்து புத்தாண்டு வாழ்த்துகள் என ஒரு apk file அல்லது link செய்தி வரும். அந்த செய்தியில் உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோருக்கு புத்தாண்டு வாழ்த்து அட்டை அனுப்பலாம் என அதில் குறிப்பிடப்பட்டு இருக்கும். 

நீங்கள் அந்த apk file -ஐ open செய்துவிட்டால் உங்களது போனில் உள்ள தரவுகள் திருடப்பட்டு உங்கள் தனிப்பட்ட தகவல்கள் எடுக்கப்படும். மேலும் உங்களது வங்கி கணக்கு தொடர்பான விபரங்களை தெரிந்துகொண்டு பண மோசடி செய்து விடுவார்கள்.

எனவே வாட்ஸப்-ல் வரும் இது போன்று அறிமுகமில்லாத எண்ணிலிருந்து புத்தாண்டு வாழ்த்துகளை தவிர்க்க வேண்டும். அந்த எண்ணிற்க்கு மொபைல் போன் மூலமாக அழைத்து விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும். 

இது போன்ற பண மோசடி நடைபெற்றால் சைபர் கிரைம் இணையதளத்தில் cybercrime.gov.in அல்லது 1930 எண்ணை தொடர்பு கொண்டு உடனடியாக புகார் பதிவு செய்யுமாறு திருநெல்வேலி மாவட்ட காவல்துறை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new year link scam tn police alert


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->