மனித மூளையை மேம்படுத்தும்.. ரோபோ விளையாட்டு.!
Robotic game which improves human brain activity
அமெரிக்காவில் ரோபோக்கலுடன் மனிதன் விளையாடும் போது அவனுடைய மூளையின் செயல் திறன் மேம்படுவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அமெரிக்காவின் ஃபுளோரிட மாகாணத்தைச் சார்ந்த பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மனிதர்களுக்கும் ரோபோக்களுக்கும் இடையேயான டேபிள் டென்னிஸ் போட்டி ஒன்றை நடத்தினர். அந்தப் போட்டியில் கலந்து கொண்ட மனிதர்களின் தலையில் எலக்ட்ரோடு பொருத்தப்பட்ட தலைக்கவசங்கள் அவர்களது நடவடிக்கைகளை ஆராய்வதற்காக பொருத்தப்பட்டன.
டென்னிஸ் பந்துவீச்சு இயந்திரத்தை எதிர்கொள்ளும்போது மனித மூளையின் நியூட்ரான்கள் ஒரு சீராக இல்லாமல் அங்கும் இங்கும் நகர்வதை அந்த ஆய்வின் மூலம் அறிய முடிந்தது. இது மனித மூளையானது வழக்கத்தை விட சிறப்பாக செயல்படுவதை காட்டுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
நம்மை விட ஆற்றலில் அதிகம் மிகுந்த ரோபோக்கலுடன் போட்டி போடும்போது மனித மூளையின் செயல் திறன் ரோபோக்களுக்கு இணையான வேகத்தில் செயல்படுவதை இந்த ஆய்வுகள் காட்டுகின்றன. நியூட்ரான்களின் இயக்கம் நமது சிந்தனைக்கு ஏற்ப வேகம் எடுப்பதை இந்த ஆய்வுகள் காட்டுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
English Summary
Robotic game which improves human brain activity