ரூ. 2,499-க்கு அறிமுகமான புது ப்ளிப் போன் மாடல்! வாங்கலாமா? வேண்டாமா?
Rs 2499 New Flip Phone Model Launched can i buy Don you
நாம் சிறுவயதில் பயன்படுத்திய ப்ளிப் மாடல் போன்கள், குறிப்பாக 90கிட்ஸ் நினைவுகளில் மகிழ்ச்சியைத் தருகின்றன. தற்போது, அதே ப்ளிப் மாடல் பாணியில் ஐடெல் ப்ளிப் ஒன் மொபைல் இந்திய சந்தையில் புதியதாக அறிமுகமாகியுள்ளது. இது மிகக் குறைந்த விலையில், அதேசமயம் பல முக்கிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.
இம்மொபைல், லெதர் பேக் மற்றும் கிளாஸ் கீபேட் உடன் மென்மையான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இதன் எடை குறைவாக இருப்பதால், நீங்கள் இந்நவீன ப்ளிப் போனை மிக இலகுவாக ஒரே கையால் பயன்படுத்த முடியும்.
2.4 இன்ச் QVGA டிஸ்பிளே, பார்வைக்கு சிறந்த அனுபவத்தை தருகிறது. ப்ளூடூத் காலிங் வசதியால், நீங்கள் எளிதாக தொடர்புகளை ஏற்படுத்தலாம்.1200 mAh பேட்டரி, 7 நாட்களுக்கு பேட்டரி பக்கம் வழங்குகிறது, இது பயணங்களில் மிகவும் உதவியாக இருக்கும்.
13 இந்திய மொழிகளின் ஆதரவு இருப்பதால், எல்லோருக்கும் பயன்படுத்த சுலபமாக உள்ளது. எஃப்.எம். ரேடியோ, கிங் வாய்ஸ் அசிஸ்டண்ட் மற்றும் விஜிஏ கேமரா போன்ற அம்சங்கள் உங்கள் தினசரி தேவைகளுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். டுயல் சிம் வசதி மூலம், இரண்டு சிம் கார்டுகளை ஒரே போனில் பயன்படுத்தலாம்.
இந்த போன் லைட் புளூ, ஆரஞ்சு, பிளாக் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. இது, ₹2,499 என்ற மலிவான விலையில் கிடைப்பதுடன், 1 வருட வாரண்டி வழங்கப்படுகிறது.
இல்லத்தினர், முதியவர்கள் மற்றும் குறைந்த விலையில் தரமான அம்சங்களை தேடுபவர்களுக்கு, ஐடெல் ப்ளிப் ஒன் மொபைல் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
English Summary
Rs 2499 New Flip Phone Model Launched can i buy Don you