அசத்தல் அப்டேட்-வுடன் வெளியாகிய சாம்சங் கேலக்ஸி S22 சீரிஸ்! - Seithipunal
Seithipunal


சாம்சங் நிறுவனம் இம்மாத துவக்கத்தில் கேலக்ஸி S22 சீரிஸ் சாதனங்களுக்கு ஒன் யுஐ 5 பீட்டா வெர்ஷனை வழங்கியது. இதனை தொடர்ந்து, தற்போது இரண்டாவது பீட்டா வெர்ஷனை இந்தியா, அமெரிக்கா மற்றும் லண்டன் போன்ற நாடுகளில் வழங்கி வருகிறது. 

முன்னதாக வெளியிடப்பட்ட ஒன் யுஐ 5.0 பீட்டா அப்டேட் அளவில் 3 ஜிபியாக இருந்தது. தற்போது வெளியிடப்பட்டு வரும் இரண்டாவது பீட்டா 1 ஜிபியாக உள்ளது. இந்த அப்டேட் பல்வேறு பிழை திருத்தங்கள், ஸ்பீடு மேம்படுத்தல்கள் மற்றும் சாம்சங் ஸ்டாக் செயலிகளின் ஐகான் போன்றவற்றில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த பீட்டாவில் ஸ்மார்ட் சஜெஷன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மெயிண்டனன்ஸ் மோட் கொண்டு ஸ்மார்ட்போனை சரி செய்ய கொடுக்கும் போது தனிப்பட்ட தகவல்களை மறைத்து வைக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், பிக்ஸ்பி ரொடின்ஸ்ஸில் புதிதாக லைப்ஸ்டைல் மோட் சேர்க்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, பிரைவசி டிடெக்‌ஷன் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், புகைப்படம், கிரெடிட் கார்டு, ஐடி கார்டு அல்லது பாஸ்போர்ட் உள்ளிட்ட தகவல்களை பரிமாறும் போது அவசியம் இதனை அனுப்ப வேண்டுமா என்பதை கேட்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Samsung Galaxy S22 series update


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->