Va Varalam Va | ட்ரெண்டிங்கில் ஜில்லு ஜில்லு.. தேவாவின் இசையில் அசத்தும் "வா வரலாம் வா" பாடல்!  - Seithipunal
Seithipunal


எஸ்.ஜி.எஸ். கிரியேட்டிவ் மீடியா எஸ்பிஆர் தயாரிக்கும் திரைப்படம் "வா வரலாம் வா". தயாரிப்பாளர் எஸ்பிஆர், இயக்குநர் எல்.ஜி. ரவிசந்தர் உடன் இணைந்து இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வரும் டிசம்பர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்தில் கதாநாயகனாக, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பாலாஜி முருகதாஸ், முதன் முறையாக கதாநாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக கருமேகங்கள் கலைகின்றன படத்தில் நடிப்பில் கலக்கியிருக்கும் மஹானா சஞ்சீவி, நடித்திருக்கிறார். 

இப்படத்தின் வில்லனாக "மைம்" கோபி, முதன்மையான கதாபாத்திரத்தில் ரெடின் கிங்ஸ்லீ இவர்களுடன் இயக்குனர்கள் சிங்கம்புலி, சரவண சுப்பையா, நடிகைகள் தீபா, காயத்ரி ரெமா, நடிகர்கள் வையாபுரி, வாசு விக்ரம், பயில்வான் ரங்கநாதன், போண்டா மணி, மீசை ராஜேந்திரன், கிரேன் மனோகர், ரஞ்சன், திலீபன், பிரபாகரன், யோகி ராமசாமி, வடிவேல் பீட்டர் உள்ளிட்ட பல பிரபலங்களும், 40 குழந்தைகளும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்திற்கு இசையமைத்துள்ள தேவாவின் தேனிசையில், கருத்துள்ள கானா பாடல், இளைஞர்களுக்கான காதல் பாடல், குழந்தைகளுக்கான மிமிக்ரி பாடல், மனதை மிருதுவாக்கும் மென்மையான மெலோடி பாடல் என அனைத்து விதமான ரசிகர்களையும் கவர்ந்திழுக்கும் விதமாக நான்கு வகையான பாடல்கள் அமைத்துள்ளது.

இந்த திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா கடந்த 15 ஆம் தேதி சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப்பில் நடைபெற்றது. முன்னணி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் கலந்துகொண்டு 'வா வரலாம் வா' திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரையிலரை வெளியிட்டனர். 

இந்நிலையில், தேவாவின் தேனிசையோடு அவரின் குரலில் எஸ்ஜிஎஸ் மியூஸிக்ஸ் யூடியூப் தளத்தில் வெளியான வா வரலாம் வா திரைப்படத்தின் முதல் பாடலான 'ஜில்லு ஜில்லு' பாடல் 7 லட்சம் பார்வைகளை கடந்து, ட்ரெண்டாகி வருகிறது.

மேலும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

மேலும், இந்த பாடலுக்கு ஏற்றாற்போல் நடிகர் ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யாவை மாஸாக வைத்து ரசிகர்கள் ட்ரண்ட் செய்து வருகின்றனர்.


ரசிகர்களின் காணொளிகள் :


வ வரலாம் வா படத்தின் ட்ரைலர் :


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Va Varalam Va Movie Jillu Jillu Song trending in social media


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->