ஸ்டாலினின் தூக்கத்தை கெடுத்த பெண் கவுன்சிலர்! நைட்டியுடன் தெருவில் இறங்கி அடாவடி!
Coimbatore DMK councilor video viral
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ராஜன் நகரில் கோவை மாநகராட்சி 34வது வார்டு திமுக கவுன்சிலரும் கல்வி குழு தலைவருமான மாலதி வசித்து வருகிறார். அவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் தொழிலதிபர் சுபாஷுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் சுபாஷ் தனது வீட்டின் முன்பு சாலை ஓரத்தில் மரச்செடி நட்டு அதற்கு வேலி அமைத்து வளர்த்து வந்துள்ளார். அதற்கு திமுக கவுன்சிலர் மாலதி சாலை ஓரங்களில் மரங்களை நடக்கூடாது சுபாஷிடம் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் இன்று காலை சுபாஷ் வீட்டிற்கு முன் வைத்திருந்த சிறிய மரத்தினை நைட்டியுடன் களத்தில் இறங்கிய மாலதி மரத்தைபிடுங்கி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக கவுன்சிலர் மரத்தை பிடுங்கி எறிந்ததும் இல்லாமல் "மரத்தை நான் தான் பிடுங்கினேன், யாரிடம் வேண்டுமானாலும் புகார் தெரிவித்துக்கொள்" என ஆணவத்துடன் பேசியுள்ளார். இது தொடர்பான காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே திமுகவின் மூத்த நிர்வாகிகளின் செயல்பாடுகளால் ஸ்டாலின் தூக்கத்தை இழந்து புலம்பித் தவிக்கும் நிலையில் இப்பொழுது திமுக கவுன்சிலர்களும் தூக்கத்தை கெடுக்கும் பட்டாளத்தில் இணைந்து விட்டனர். திமுகவில் ஸ்டாலினின் தூக்கத்தை கெடுக்கும் அணி என்று தனி பிரிவையே உருவாக்கி விடலாம் என நெட்டிசன்கள் கலாய்கின்றனர்.
English Summary
Coimbatore DMK councilor video viral