#RunOut || மின்னல் வேகத்தில் பாய்ந்த விராட் கோலியின் வீடியோ வைரல்.!! - Seithipunal
Seithipunal


நடப்பு ஐபிஎல் தொடரின் 58 வது லீக் போட்டியில் பெங்களூரு அணியும் பஞ்சாப் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் முதலில் களம் இறங்கிய பெங்களூர் அணி ஏழு விக்கெட்டுகள் இழப்பதற்கு 241 ரன்கள் என்ற இமாலய இலக்கை பஞ்சாப் அணிக்கு நிர்ணயித்தது. 

பஞ்சாப் அணி 242 என்ற கடின இலக்கை நோக்கி விளையாட தொடங்கிய நிலையில் 17 வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 63 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தனது 5வது வெற்றியை பதிவு செய்தது.

இந்த போட்டியில் 6வது விக்கெட்டுக்கு களமிறங்கிய இறங்கிய சாம் கரனை விராட் கோலி ரன் அவுட் செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 14 ஆவது ஓவரை பர்கசன் வீச அதனை எதிர்கொண்ட சாம்கரன் லெக் சைடல் தட்டி விட்டு ரன் ஓட முயன்றார்.

அப்போது பவுண்டரி லைனில் இருந்து மின்னல் வேகத்தில் ஓடி வந்த விராட் கோலி பாய்ந்து பந்தை பிடித்ததோடு சரியாக ஸ்டெம்பில் அடித்து சாம் கரனை ரன் நோட் செய்தார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ipl 2024 Virat Kohli run out video viral


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->