அக்னி நட்சத்திரம் கடந்தும் 11 இடங்களில் சதம் அடித்த வெயில்..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த மே 29ஆம் தேதியோடு அக்னி நட்சத்திரம் முடிவடைந்த நிலையில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மாலை நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

இருப்பினும் பகல் நேரத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று 11 இடங்களில் 100 டிகிரி பாரஹீட்டிற்கு மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளது. 

அதன்படி தமிழகத்தில் அதிகபட்சமாக இன்று வேலூர் மற்றும் பாளையங்கோட்டையில் 102.38 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து திருத்தணி, சென்னை மீனம்பாக்கம், மதுரை மாநகர், கரூர் ஆகிய இடங்களில் 101 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும் ஈரோடு, சென்னை நுங்கம்பாக்கம், மதுரை விமான நிலையம், தஞ்சாவூர், திருப்பத்தூர் ஆகிய இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

11 places in TamilNadu heat has hit above 100 deg fahrenhei


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->