வட மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வடமாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்தி குறிப்பில்,

தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும்.

இதன்படி, இன்று முதல் வருகின்ற 11-ம் தேதி வரை திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, பெரம்பலூர், அரியலூர், சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. 

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 60 கி.மீ. வேகம் வரை சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chance of heavy rain for 4 days in northern districts in tamilnadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->