மக்களே உஷார்! காலை முதலே கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை! எந்த எந்த மாவட்டம்! முழு விவரம்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில், வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சியால் ஈரப்பதமான காற்று தென்மேற்கில் இருந்து குவிந்து வருகிறது. இதனால் நிலவுள்ள காற்று மோதலினால், தமிழகத்தில் பரவலாக மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன. 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று (நவம்பர் 7) முதல் நவம்பர் 13 வரை பரவலான மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக இன்று காலை 10 மணி வரை, தமிழ்நாட்டின் 15 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியின் காரைக்கால் பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய மழை ஏற்படும் வாய்ப்புள்ளது. 

மேலும், சென்னையைச் சுற்றியுள்ள செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chance of rain till 10 am in 15 districts


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->