உஷார் மக்களே!! 40 - 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை!!! இன்றும் நாளையும் கனமழை எச்சரிக்கை!!
Heavy rain strong winds speed of 40 50 kmph Heavy rain warning today and tomorrow
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று மழை குறித்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.அதில் குறிப்பிட்டிருப்பதாவது,"தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகி இருக்கக்கூடிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் இன்று புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.

புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட 5 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் இன்றும், நாளையும் 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதே நேரம் மதிய வேளையில் வெயிலின் தாக்கம் 36° செல்சியல் வரை பதிவாகக்கூடும்" என அறிவித்துள்ளது.இதனால் மக்களை முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனத் தெரிவிர்த்துக்கொள்கிறது.
English Summary
Heavy rain strong winds speed of 40 50 kmph Heavy rain warning today and tomorrow