இங்கேயும் இந்தி திணிப்பா!!! தமிழ்நாடு வானிலை மையத்தின் இணையதளத்தில் இந்தி....! ஏன்?
Hindi being used website Tamil Nadu Meteorological Department
தமிழ் ஆங்கில மொழியோடு இந்தி மொழியையும், தமிழ்நாடு வானிலை ஆய்வு மையத்தின் இணைய பக்கத்தில் சேர்க்கப்பட்டது தற்போது பெரும் பரபரப்பை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு வானிலை மையத்தின் இணைய பக்கத்தில் இதுவரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வானிலை அறிக்கைகள் வெளியிடப்பட்டு வந்தன. தற்போது தமிழ், ஆங்கிலத்தோடு சேர்த்து மூன்றாவது மொழியாக இந்தி மொழியில் வானிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தென்னிந்திய மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளாவின் வானிலை மைய இணைய பக்கத்தில் தாய்மொழியோடு ஆங்கிலம் மட்டுமே உள்ள நிலையில், தமிழ்நாட்டில் இந்தி மொழி சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த மும்மொழி கொள்கை என்ற பெயரில் மத்திய அரசு இந்தி திணிப்பதாக தமிழ்நாடு அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், தமிழ்நாடு வானிலை மையத்தின் இணைய பக்கத்தில் இந்தி சேர்க்கப்பட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது.
இதற்கு பல பக்கங்களிலிருந்து எதிர்ப்பு எழுந்துள்ளது.
English Summary
Hindi being used website Tamil Nadu Meteorological Department