சூறாவளி காற்று! புரட்டிப்போட போகும் மழை! மக்களே உஷாரா இருங்க! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, ஒடிசாவை நோக்கி வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறி நகர்ந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், காற்றழுத்த தாழ்வு பகுதி பூரி, கோபால்பூர் மற்றும் பாரத்பூர் ஆகிய பகுதிகளுக்கு அருகில் நிலை கொண்டு இருக்கும். வடமேற்கு மேற்கு பகுதிகளை நோக்கி மெதுவாக நகர்ந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அநேக இடங்களில் காற்றின் வேகம் அதிகரித்து புயல் காற்று வீசும்.

வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வரும் காற்றழுத்து தாழ்வு மண்டலம் ஒடிசா கடற்கரையில் பூரிக்கு அருகில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம். கடலில் மீன் பிடித்துக்கொண்டிருக்கும் மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப அறிவுறுத்தபட்டுள்ளனர்.

காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக குஜராத், மத்திய மகாராஷ்டிரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஒடிசா,சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய பகுதிகளுக்கு இன்றும் நாளையும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India Meteorological Department red alert for Maharashtra and Gujarat states


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->