தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையுமா? - வானிலை ஆய்வாளர்கள் விளக்கம்.!!
meteorologists explain chance of heat decreasing in tamilnadu
இந்தியாவில் கோடைகாலம் தொடங்கியுள்ளது. கோடைக்காலம் தொடங்கியது முதலே வெயில் வட்டி வதைக்கிறது. அதிலும் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி வரை அதிகரித்து சுட்டெரித்து வருகிறது.
கடந்த ஒரு வாரமாக வெயிலின் கொடுமை சற்று அதிகமாகவே உணர முடிகிறது. இந்த நிலையில், இனி வரும் நாட்களிலும் வெப்பத்தின் தாக்கம் எப்படி இருக்கும்? என்பது குறித்து வானிலை ஆய்வாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்

இது தொடர்பாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதாவது:- "வளிமண்டலத்தில் வறண்ட காற்றும், தரைக்காற்றில் அதிக ஈரப்பதமும் இருப்பதால் வெப்பநிலை அதிகமாக உள்ளது. இந்த மாதம் இறுதி வரை வெப்பம் இயல்பைவிட அதிகமாகவே இருக்கும். வழக்கமாக மே மாதம் 4-ந் தேதியில் இருந்து அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் தொடங்கும்.
ஆனால், இந்த ஆண்டு கத்தரி வெயில் காலத்தில் வெப்பத்தின் தாக்கம் குறைவாகவே இருக்கும். காரணம் மே முதல் வாரத்தில் இருந்து 18-ந் தேதி வரையிலான நாட்கள் வரையில் மழைக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. அப்போது வெயில் குறைந்து, மே மாதம் இறுதியில் மீண்டும் வெப்பம் உயரும்.
திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, திருத்தணி, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், சென்னை மீனம்பாக்கம் உள்ளிட்ட வட மாவட்டங்கள் மற்றும் உள், மேற்கு மாவட்டங்களில்தான் வெப்பம் இயல்பைவிட அதிகமாக பதிவாகும். வருகிற 24-ந் தேதிக்கு பிறகு அதிகபட்சமாக 42 டிகிரி வெயில் பதிவாக வாய்ப்புள்ளது என்றுத் தெரிவித்தனர்.
English Summary
meteorologists explain chance of heat decreasing in tamilnadu