அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
Next 3 hours rain in 4 districts of tamilnadu
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு நிசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 7ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் நான்கு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, அடுத்த 3 மணி நேரத்தில் நீலகிரி, ஈரோடு, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் அரை மணி நேரம் கனமழை பெய்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
Next 3 hours rain in 4 districts of tamilnadu