தமிழகத்தில் கொட்டித் தீர்க்க போகும் மழை - வானிலை மையம் தகவல்.!
rain alert at seven days in tamilnadu
தமிழகத்தில் கோவை, சேலம், தர்மபுரி, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், இன்று முதல் 7ம் தேதி வரை, ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது.
இன்று முதல், 7ம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில், பல இடங்களில், இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.
இந்த நிலையில், சென்னையில் அடுத்த இருபத்துநான்கு மணி நேரத்திற்கு, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில், இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யும்.
தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில், பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. அதில், அதிகபட்சமாக கோவை மேட்டுப்பாளையம், பில்லுார் அணை பகுதியில், 13 செ.மீ., மழையும், ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் 12 செ.மீ தென்காசி மாவட்டம் சிவகிரி, சென்னை ஆலந்துார், திருவள்ளூர் மாவட்டம் புழல் உள்ளிட்ட பகுதிகளில் 11 செ.மீ., மழையும் பெய்துள்ளது.
English Summary
rain alert at seven days in tamilnadu