உடனே செல்போனை சார்ஜ் போடுங்க! கொட்டி தீர்க்கபோகும் மழை! குடையை மறந்துடாதீங்க! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் ஆறு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் இடி மின்னல் பலத்த காற்றுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் கடந்த இரண்டு மூன்று நாட்களாகவே இரவில் பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய பகுதிகளில் அவ்வப்போது ஓரிரு இடங்களில் கன மழை முதல் லேசான மழை வரை பெய்து வருகிறது.

வரும் 11ம் தேதி கோவை மலைப்பகுதி நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் 12ஆம் தேதி நீலகிரி, ஈரோடு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

வரும் 14ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை முதல் லேசான மழை வரை பெய்யும். சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும். தலைநகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இந்த நிலையில், தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ஆகிய ஆறு மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Six districts in Tamil Nadu are likely to receive rain in the next three hours


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->