கேரளாவில் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..! - Seithipunal
Seithipunal


வழக்கமாக தென் மேற்குப் பருவமழையானது ஜூன் முதல் வாரத்தில் தான் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு முன்கூட்டியே பருவ மழை தொடங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கேரளாவில் இன்னும் 3 நாட்களில் பருவமழை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கத்தை விட முன்னதாகவே கேரளாவிலும் இன்னும் இரண்டு நாட்களில் தென்மேற்குப் பருவமழை தொடங்குவதால் மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும் தமிழ்நாட்டில் இந்த தென்மேற்குப் பருவமழையால் மேற்குத் தொடர்ச்சி மாவட்டங்களில் பரவலான மழை பெய்யும்.

இந்நிலையில் கத்திரி வெயில் நேற்றுடன் நிறைவு பெற்றது. ஆனாலும் அனைத்து மாவட்டங்களிலும் அதிகபட்ச வெப்பம் பதிவாகியுள்ளது. வெப்ப அலை காரணமாக மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் தென்மேற்கு பருவ மழை தொடங்குவதால் கடலோர பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 65 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளது என்பதால் மீனவர்கள் இரண்டு நாட்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுஉள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SouthWest Monsoon will start Within 2 days in Kerala


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->