தமிழகத்தில் ஏற்றப்பட்டுள்ள ஒன்றாம் எண் புயல் கூண்டு...!
The number one storm cage installed in Tamil Nadu...!
சென்னை உள்பட எட்டு துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக்கான கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
நேற்று வடக்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்து ஒடிசா மாநிலம் பாலசூருக்கு அருகே சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவிற்கு அப்பால் உள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, மேற்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரை இடையே கரையைக் கடக்க கூடும். அதன்பின், ஜார்கண்ட் நோக்கி சென்று வலுவிழக்கும். இதன் காரணமாக சென்னை, காட்டுப்பள்ளி, எண்ணூர், புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம், பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
English Summary
The number one storm cage installed in Tamil Nadu...!