தமிழகத்தில் மழை தொடரும்: 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!
TN Rain IMD weather update tamilnadu
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரளாவின் மீது நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் என 17 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
இதேபோல் தென்தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில், வடதமிழகத்தின் சில பகுதிகளில், புதுச்சேரி, காரைக்காலிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
நாளை கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் பகுதிகளில் கனமழை இருக்கும்.
ஏப்ரல் 5-ந்தேதி நீலகிரி, கோவை மாவட்டம் மலைப்பகுதிகள், ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
English Summary
TN Rain IMD weather update tamilnadu