அசானி புயல் எதிரொலி : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில்...., வானிலை ஆய்வு மையம் விடுத்த தகவல்.!
weather report 3 hours tn asani cyclone
அசானி புயல் எதிரொலியாக அடுத்த 3 மணி நேரத்தில் (11.05.2022/மாலை 6 மணி முதல்) தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அசானி புயல் எதிரொலியாக தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தகவல் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் (11.05.2022/மாலை 6 மணி முதல்) புயல் எதிரொலியாக தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் விடுத்த அறிவிப்பில், தமிழகத்தில் அடுத்த மூண்டு மணி நேரத்துக்கு., திருவள்ளூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
weather report 3 hours tn asani cyclone