கனமழை எச்சரிக்கை.. தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்..!! - Seithipunal
Seithipunal


வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்பொழுது திரிகோணமலைக்கு கிழக்கே 180 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேற்கு நோக்கி நகர்ந்து இன்று இலங்கையின் கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

குறிப்பாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதனால் தென் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மற்றும் நாளை கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Yellow alert for 11 districts in Tamil Nadu today


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->