தொடரும் இஸ்ரேல் தாக்குதல் - 10 பாலஸ்தீன படை வீரர்கள் பலி..!! - Seithipunal
Seithipunal


கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் போர் நிறுத்தம் குறித்து வலியுறுத்தியும் இஸ்ரேல் அதை நிராகரித்து விட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பாலஸ்தீனத்தில் வணிகப் பொருட்களை பாதுகாத்து வந்த பாதுகாப்பு படை வீரர்கள் மீது இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 10 பேர் வரை இறந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து இறந்தவர்களின் உடலையும், காயம் அடைந்தவர்களையும் காசா மருத்துவனைக்கு கொண்டு சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த தாக்குதல குறித்து இஸ்ரேல் ராணுவம் இன்னும் எந்த கருத்தும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக மேற்கு கரையில் இருந்து காசாவிற்கு பாதுகாப்பு படை வீரர்களின் பாதுகாப்புடன் வணிகப் பொருட்களை கொண்டு செல்ல இஸ்ரேல் அனுமதி அளித்திருந்தது. இதையடுத்து கடந்த திங்கட்கிழமை தான் வணிகப் பொருட்கள் கொண்டு சென்ற வாகனத்தின் மீது இஸ்ரேலிய வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 9 பேர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து தற்போது மீண்டும் 2 ஆவது முறையாக வணிகப் பொருட்கள் கொண்டு செல்லும் போது பாலஸ்தீன படை வீரர்கள்  மீது இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது நடத்திய தொடர் தாக்குதலில் 37396 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு உள்ளதாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10 Palestine Security Force Soldiers Died in Israel Attack


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->