#இங்கிலாந்து : களத்தில் இறங்கிய பிரதமர் ரிஷி சுனக்..! 105 வெளிநாட்டினர் அதிரடி கைது...! - Seithipunal
Seithipunal


வறட்சி மற்றும் வேலை வாய்ப்பின்மை காரணமாக மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து மக்கள் சட்டவிரோதமாக இங்கிலாந்தில் குடியேறி வருகின்றனர். இதனால் இங்கிலாந்தில் உள்ளூர்வாசிகள் வரி, பாதுகாப்பு மற்றும் சட்ட ரீதியான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.

இதனிடையே இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்ற பின்பு, சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோருக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளையும், சட்டங்களையும் விதித்தார். மேலும் இங்கிலாந்தில் சட்டவிரோதமாக எந்த நாட்டினரும் தங்க அனுமதிக்க மாட்டோம் என உறுதியளித்தார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் குண்டு துளைக்காத ஆடையை அணிந்து, பாதுகாப்பு அதிகாரிகளுடன் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களை கைது செய்யும் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டார்.

இதில் உணவகங்கள், நெயில் பார்கள், முடிதிருத்தும் கடைகள், ஹோட்டல்கள் மற்றும் கன்வீனியன்ஸ் கடைகள் உள்ளிட்ட வணிக வளாகங்களில் சட்டவிரோதமாக பணியாற்றி வந்த வெளிநாட்டினரின் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையில் 20 நாடுகளைச் சேர்ந்த 105 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களில் 40க்கும் மேற்பட்டோர் முதல் கட்டமாக இங்கிலாந்திலிருந்து வெளியேற்றப்படுவதற்காக உள்துறை அமைச்சகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

105 illegal immigrants arrested as PM rishi sunak takes field act in England


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->