காங்கோ || இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலி.!
11 killed in Congo concert stampede
காங்கோ தலைநகர் கின்ஷாசாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 2 காவல்துறை அதிகாரிகள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் தலைநகர் கின்ஷாசா மைதானத்தில் நடைபெற்ற ஆபிரிக்காவின் முன்னணி இசைக்கலைஞரான 44 வயதான ஃபாலி இபுபாவின் பிரமாண்டமான இசை நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர்.
அரங்கம் அதன் 80,000 அளவைத் தாண்டி நிரம்பியிருந்ததால் கூட்ட நெரிசல் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு நிலைமை மோசமானதால், ஏராளமானோர் நிகழ்ச்சி நடைபெறும் மேடை நோக்கி செல்லம் முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி 2 போலீஸ்காரர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 7 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சியோலில் ஹாலோவீன் நிகழ்வில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 150க்கும் மேற்பட்டோர் பலியாகிய சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த பேரழிவு ஏற்பட்டுள்ளது.
English Summary
11 killed in Congo concert stampede