கோதுமை மாவு இலவசம்... அலைமோதிய கூட்டம்... நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சோகம்...!
11 people died in a stampede to get free wheat flour in Pakistan
நமது அண்டை நாடான பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரமலான் மாதத்தையோட்டி, பஞ்சாப் மாகாணத்தில் வசிக்கும் ஏழை குடும்பங்களுக்கு தலா 10 கிலோ கோதுமை மாவு பாக்கெட்டுகள் பொது விநியோக மையங்களில் வாயிலாக இலவசமாக வழங்க பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து மக்கள், இலவச கோதுமை மாவு பாக்கெட்டுகளை பெற பல்வேறு இடங்களில் தள்ளு முள்ளு நிலவியது. இதில் தெற்கு பஞ்சாபின் சாஹிவால், பஹவல்பூர், முசாபர்கர் மற்றும் ஒகாரா ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள இலவச மாவு மையங்களில் நெரிசலில் சிக்கி 60 பேர் காயமடைந்தனர். இதேபோன்று பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் சாம்பிரியல் நகரில் உள்ள பொது விநியோக மையத்திற்கு கோதுமை பாக்கெட்டுகளை எடுத்து வந்த லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் கோதுமை மாவு பாக்கெட்டுகளை கொள்ளையடித்து சென்றது குறிப்பிடத்தக்கது.
English Summary
11 people died in a stampede to get free wheat flour in Pakistan