ஹைதியில் போராட்ட கும்பல் தாக்குதல்.! 20க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தீ வைப்பு.! 12 பேர் பலி - Seithipunal
Seithipunal


ஹைதியில் போட்டி கும்பல்கள் நடத்திய கொடூர தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பல வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன என்று மேயர் ஜோசப் ஜீன்சன் குய்லூம் தெரிவித்துள்ளார்.

ஹைதியில் அரசுக்கு எதிராக போராட்ட கும்பல்கள் அவ்வப்போது பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போர்ட்-ஓ-பிரின்ஸின் வடமேற்கே உள்ள சிறிய நகரமான காபரேட்டில், கையில் துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் வந்த ஒரு கும்பல் குடியிருப்பு பகுதியில் கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டனர்.

மேலும் 20-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தீ வைத்துள்ளனர். இந்த கொடூர தாக்குதலில் அப்பாவி மக்கள் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள அப்பாவி மக்கள் அச்சத்தில் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர்.

இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே சிதறிக்கிடப்பதையும், இரவு முழுவதும் 20 க்கும் மேற்பட்ட வீடுகளை தீயில் எரியும் காட்சிகளை சமூக வலைதளங்களில் போராட்டக்காரர்கள் வெளியிட்டுள்ளனர்.

மேலும் தேசிய காவல்துறைக்கு தாக்குதல் நடத்தியவர்களை நீதியின் முன் நிறுத்தவும், காபரேட்டில் அதிகாரிகளின் இருப்பு மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்தவும் மேயர் குய்லூம் உத்தரவிட்டார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

12 killed more than 20 homes set on fire as gang war erupts in Haiti


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->