உக்ரைன் - ரஷ்யா இடையிலான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை.. வெளியான முடிவுகள்.!!
13 day of ukraine russia war
உக்ரைன் மீது 13-வது நாளாக ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. அபார பலம் கொண்ட ரஷ்யா, உக்ரைனின் முக்கிய நகரங்களை உருக்குலைத்து வருகிறது. முக்கிய நகரங்கள் அனைத்தையும் ஏவுகணைகள் வீழ்ச்சி, வான்வழித் தாக்குதல், பீரங்கி தாக்குதல் நடத்தி உருக்குலைய வைத்து வருகிறது.
ரஷ்யப் படைகளுக்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. இடையே நடைபெறும் போரில் பல்லாயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். ரஷ்யா மனிதாபிமான அடிப்படையில் பொதுமக்களை வெளியேறுவதற்கு ஏதுவாக ஒரு சில நகரங்களில் போர் நிறுத்தம் அறிவித்து உள்ளது. ஆனால் ரஷ்ய ராணுவம் பொது மக்களை வெளியேற விடாமல் தடுப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில், ரஷ்யாவுக்கு எதிரான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. தங்கள் நிபந்தனைகளை உக்ரைன் ஏற்கவில்லை என ரஷ்ய தெரிவித்துள்ளது. நாளை மறுதினம் இருநாட்டு அமைச்சர்கள் துருக்கியில் பேச்சுவார்த்தை நடத்த சம்மதம் தெரிவித்துள்ளனர்.
English Summary
13 day of ukraine russia war