அமெரிக்கா: 18 வயதில் மேயர் தேர்தலில் வெற்றி பெற்று வரலாறு படைத்த வாலிபர்.! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா அர்கான்சாஸ் மாகாணத்தின் கிழக்கே உள்ள இயர்லே என்ற சிறிய நகரத்தின் மேயர் தேர்தலில், சமீபத்தில் கல்லூரி படிப்பை முடித்த 18 வயதான ஜெய்லன் ஸ்மித் என்பவர் வெற்றி பெற்றுள்ளார். மேலும் அமெரிக்க வரலாற்றில் மிக இளம் வயதில் மேயர் தேர்தலில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

இவர் தேர்தலில் 235-க்கு 183 வாக்குகள் வித்தியாசத்தில் இவரை எதிர்த்து போட்டியிட்ட நகரின் நகரின் சாலை மற்றும் துப்புரவு கண்காணிப்பாளர் நெமி மேத்யூஸை தோற்கடித்தார்.

மேலும் ஸ்மித் இந்த வெற்றிக்கு பிறகு தனது பேஸ்புக்கில், எனது தாயாரால் அழுகையை நிறுத்த முடியவில்லை. இயர்லே நகரின் சிறந்த அத்தியாயம் கட்டமைக்கும் தருணம் இது என்றும், தனது பிரச்சார முழக்கத்திற்கு ஆதரவளித்து தேர்தலில் தனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

18 year old who became youngest mayor in US history


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->