அய்யய்யோ... 2024 YR4 விண்கல்லால் நிலவுக்கு ஆபத்து..? பெரிய அளவில் பள்ளம், தூசி மணல் படலம் பரவும்; ஆய்வாளர்கள் அதிர்ச்சி..? - Seithipunal
Seithipunal


2024 YR4 என்கிற விண்கல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விண்கல் பூமியை தாக்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால், தொடர் ஆய்வுகளுக்கு பின்னர் இந்த விண்கல்லால் பூமிக்கு ஆபத்து இல்லை,நிலவுக்குதான் ஆபத்து என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

கடந்த ஆண்டு இறுதியில் சிலியில் இருந்த நாசாவின் ஆய்வு மையத்தில் இந்த விண்கல் கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, வியாழன் கோளுக்கும், செவ்வாய் கோளுக்கும் இடையே விண்கல் குவியல்கள் இருக்கின்றதாகவும்,  இதிலிருந்து விண்கற்கள் சில சூரியனை நோக்கி வரும்போது, அது பூமி மீது மோதுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது என கூறப்பட்டது.

விண்வெளியில் நிலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் கூட இந்த விண்கல் குறித்து ஏராளமான ஆய்வுகள், கணக்கீடுகள் செய்யப்பட்டது. அதுவும் இந்த விண்கல்லா னது பூமி மீது மோத 03% வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், அடுத்தடுத்த ஆய்வுகளில் இந்த சதவிகிதம் 02 என்றும் 01 என்று உறுதி செய்யப்பட்ட பின்னர், இக்கல் பூமியை தாக்காது என்று கூறப்பட்டது.

தற்போது இந்த 2024 YR4 என்கிற விண்கல்லால் நிலவுக்கு ஆபத்து இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஜான்ஸ் ஹாப்கின்ஸ் அப்பீல்டு இயற்பியல் ஆய்வகம் இது தொடர்பாக ஆய்வு செய்துள்ளது.

அதாவது, விண்கல் நிலவை மோத 1.7 முதல் 02% வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்திருக்கிறது. இந்த மோதல் மூலம் நிலவில் பெரிய பாதிப்பு ஏற்படாது என்றும், கொஞ்சம் பெரிய அளவில் பள்ளம் ஏற்படும் என்று கணித்துள்ளனர். இதனால் நிலவில் தூசி மணல் படலம் பரவும் என்றும் கூறியுள்ளனர். 

ஆனால், அது அப்படி ஒரு பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படுத்தாது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது, நிலவின் விட்டம் 3,474 கிமீ. நிலவின் மொத்த எடை 7.35 × 10¹⁹ கிலோகிராம். ஆனால் விண்கல்லின் எடை மிக சிறியது. எனவே, இது நிலவின் பாதையை எதுவும் மாற்றாது என ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2024 YR4 asteroid poses a threat to the Moon


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->