"ஆப்ரேஷன் காவேரி" திட்டத்தின் கீழ்.. சூடானிலிருந்து 278 இந்தியர்கள் மீட்பு.! - Seithipunal
Seithipunal


சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையேயான மோதல் கடந்த 10 நாட்களாக நீடித்து வருகிறது. இந்த மோதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, சூடானில் வசிக்கும் தங்கள் நாட்டு மக்களை மீட்க இந்தியா, இங்கிலாந்து சவுதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தூதரகம் வாயிலாக முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சூடானில் சிக்கி உள்ள 3 ஆயிரம் இந்தியர்களை மீட்பதற்காக "ஆபரேஷன் காவேரி" என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதில் முதல் கட்டமாக 278 பேர் சூடான் துறைமுகத்திலிருந்து, சவுதி அரேபியா ஜெட்டாவுக்கு இந்திய கடற்படை கப்பல் சுமேதா மூலம் புறப்பட்டனர் என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி ட்வீட் செய்துள்ளார்.

இதையடுத்து அவர்கள் அனைவரும் விரைவாக இந்தியா அழைத்து வரப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

278 Indians leave Sudan under Operation Kaveri


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->