துருக்கி நிலநடுக்க இடிபாட்டில் 5 நாட்களுக்கு பிறகு 2 மாத பெண் குழந்தை உயிருடன் மீட்பு..!! - Seithipunal
Seithipunal


சிரியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் கடந்த திங்கட்கிழமை 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ள நிலையில் இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது.

துருக்கி மற்றும் சிரியாவில் மீட்பு பணிகளை மேற்கொள்ள இந்தியா உட்பட பல உலக நாடுகள் உதவி வருகின்றன. பல ஆயிரம் கணக்கான தன்னார்வலர்கள் கடும் குளிரையும் பொறுப்பெடுத்தாமல் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே ஹடாய் நகரில் 5 நாட்களுக்குப் பிறகு 2 மாத பெண் குழந்தையை மீட்பு குழுவினர் உயிருடன் மீட்டு உள்ளனர். மேலும் அதே குழந்தையுடன் 6 மாத கர்ப்பிணி பெண் மற்றும் 70 வயது மூதாட்டி ஒருவரும் மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2month old baby girl rescued alive after 5days in Turkey earthquake ruins


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->