பாரிஸ் ஒலிம்பிக் போட்டி: ரஷ்யா-பெலாரஸ் வீரர்களுக்கு தடை விதிக்க 30 நாடுகள் வலியுறுத்தல்.! - Seithipunal
Seithipunal


ரஷ்யா மற்றும் பெலாரஸ் வீரர்கள் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கு தடை விதிக்க 30 நாடுகள் வலியுறுத்தியுள்ளது.

அடுத்த ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளுக்கு தடை விதிக்க இங்கிலாந்து அரசு இணையதளத்தில் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளில் விளையாட்டும், அரசியலும் நெருக்கமாக இருப்பதால், விளையாட்டில் அரசியல் தலையீடு இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரஷ்ய விளையாட்டு வீரர்களுக்கும், ராணுவத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது கவலை அளிப்பதாகவும், உக்ரைன் போர் நடந்து கொண்டிருக்கும் வரை ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாட்டின் வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்க கூடாது என்று  வலியுறுத்தியுள்ளனர். இல்லையென்றால் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், கனடா உள்ளிட்ட 30 நாடுகள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்காது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

30 countries insist ban Russia and Belarus players in Paris Olympic


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->