உக்ரைன் குடியிருப்பு பகுதிகளில் ரஷ்ய ஏவுகணை தாக்குதல் - 5 பேர் பலி
5 dead several injured in Russian missile attacks in ukraine
குடியிருப்பு பகுதிகளில் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 5 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.
உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி தொடங்கி தற்போது ஓராண்டுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உக்ரைனின் கிழக்கு பகுதிகளை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்யா தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது.
இதில் ரஷ்யா படைகள் இன்று அதிகாலை ஜோலோசிவ்ஸ்கி மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த ஏவுகணை தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்பதால் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக மேற்கு லிவிவ் பிராந்தியத்தின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இதேபோல், டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பகுதியில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், இருவர் காயமடைந்துள்ளதாகவும் ஆளுநர் செர்ஹி லிசாக் தெரிவித்துள்ளார். மேலும் இந்த இரு மாவட்டங்களில் குடியிருப்பு கட்டிடங்கள் தாக்கப்பட்டு, மிகுந்த சேதம் அடைந்துள்ளதாக கீவ் மேயர் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து டினிப்ரோ, லுட்ஸ்க் மற்றும் ரிவ்னே நகரங்களிலும் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
5 dead several injured in Russian missile attacks in ukraine