டீக்கடையில் நடந்த பயங்கர துப்பாக்கிச்சூடு - 5 பேர் பலி - Seithipunal
Seithipunal


துருக்கியில் டீக்கடையில் நடந்த பயங்கர துப்பாக்கி சூட்டில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

மேற்கு ஆசிய நாடான துருக்கியின் இஸ்மீர் மாகாணத்தின் மெண்டெரஸ் மாவட்டத்தில் உள்ள தேநீர் கடையில் சிலர் டீ குடித்து கொண்டிருந்தனர். அப்பொழுது இரு தரப்பினருக்கும் இடையே நிதி கடன் தொடர்பாக நடைபெற்ற வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த ஒரு குழு திடீரென மற்றொரு தரப்பினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வருவதற்கு முன் துப்பாக்கி சூடு நடத்திய குழு தப்பி சென்றது. இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் ஹிரியட் செய்திதாள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளதாகவும், சம்பவ இடத்திற்கு பல ஆம்புலன்ஸ்கள் மற்றும் காவல்துறை வாகனங்கள் வந்ததாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 died as shooting in tea shop in turkey


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->