ரஷ்யா - உக்ரைன் போர் பதற்றம்.. உயிரிழப்புகளை முதல் முறையாக ஒப்புக்கொண்ட ரஷ்யா.!!
500 Russia soldiers death
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் நீட்டித்து வருவதால், உக்ரைனில் தொடர்ந்து பதட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யப் படைகள் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதனால், அங்குள்ள மக்கள் அண்டை மாநிலங்களுக்கு அகதிகளாக வெளியேறி வருகின்றனர். அண்டை நாடு எல்லைகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து உக்ரைனில் இருந்து வெளியேறுகின்றனர். உக்ரைனில் இருந்து வெளியேறும் மக்களின் எண்ணிக்கை விரைவில் 10 லட்சத்தை எட்டும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு ஐநா சபை கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ரஷ்யாவும், உக்ரைனும் மத்தியஸ்தம் மற்றும் அமைதியான வழிமுறைகள் மூலம் தீர்வு காண வேண்டும் என அந்த தீர்மானத்தில் வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில், ரஷ்யா தொடர் தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. இதுவரை 500 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக ரஷ்யா முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.
English Summary
500 Russia soldiers death