செர்பியா : ரயில் தடம் புரண்டதில் அம்மோனியா வாயு தாக்கி 51 பேர் பாதிப்பு.! - Seithipunal
Seithipunal


தென்கிழக்கு செர்பியாவில் அமோனியாவை ஏற்றிச் சென்ற ரெயில் தடம் புரண்ட விபத்தில், அதன் சரக்குகள் சிதறி அமோனியா விஷவாயு பரவியதில் 51 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

அண்டை நாடான பல்கேரியாவிலிருந்து கொண்டு அமோனியா ஏற்றி வந்த 20 பெட்டிகள் கொண்ட ரயில், நேற்று மாலை தென்கிழக்கு செர்பியாவில் பைரோட் நகரத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் விஷவாயு தாக்கி 51 பேர் பாதிக்கப்பட்ட நிலையில்,  7 பேரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதாக நகரத்தின் மேயர் விளாடன் வாசிக் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து 60 ஆயிரம் பேர் வசிக்கும் அந்நகரத்தின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டு, குடியிருப்பாளர்கள் வீடுகளுக்குள் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் ரயில் தடம் புரண்டதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

51 poisoned by ammonia after train derails in Serbia


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->