இலங்கையில் ஏற்பட்ட போராட்டத்தில்..58 கைதிகள் தப்பியோட்டம்.!
58 prisoners escape during struggle in Sri Lanka!
இலங்கையில் கைதிகள் பயணித்த பேருந்து மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தி இறுதியில் 58 கைதிகள் தப்பியோடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதற்கிடையே இலங்கை தலைநகர் கொழும்புவில் பிரதமரின் இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து அமைதியாக நடைபெற்று வந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. ஆத்திரமடைந்த பொதுமக்கள் பிரதமர் இல்லத்திற்கு தீ வைத்தனர். ஆளுங்கட்சியினர் மீது அல்லது அசாதாரண சூழல் நிலவி வருகின்றது.
இந்த நிலையில் வடரெக்க சிறைச்சாலையின் புனர்வாழ்வு முகாமிற்கு கைதிகளை ஏற்றிச் சென்ற பேருந்து மீது புறா கேட்கிறவர்கள் தாக்குதல் நடத்தியதில் 3 சிறைச்சாலை அதிகாரிகள், 10 கைதிகள் காயமடைந்துள்ளனர்.
மேலும் பேருந்தில் பயணம் செய்த 58 கைதிகள் தப்பியோடி விட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
English Summary
58 prisoners escape during struggle in Sri Lanka!