இனி உலகமெங்கும்.. பிரதமர் மோடி துவக்கி வைக்கும் 5 ஜி சேவை...! - Seithipunal
Seithipunal


அடுத்த மாதம் 1 -ந்தேதி பிரதமர் மோடி இந்தியாவில் 5ஜி சேவையை துவக்கி வைக்க இருக்கிறார்.

5ஜி சேவைக்கான ஏலம் கடந்த ஜூலை மாதம் நடந்து முடிந்தது. அந்த ஏலத்தில், ஏர்டெல், ஜியோ, வோடோபோன், அதானியின் டேடா நெட்வொர்க்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டன. 

இதுகுறித்து சமீபத்தில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் பேட்டி ஒன்றை அளித்தார். அந்த பேட்டியில், அக்டோபர்1 ல் இருந்து 5ஜி சேவையை துவக்க இந்தியா தயாராகி வருகிறது. இந்த 5ஜி பயணம் மிகச்சிறப்பானதாக இருக்கும்.

40 முதல் 50 சதவீதம் பேருக்கு கிடைக்கும் அளவில் 5ஜி சேவைகள் ஏராளமான நாடுகளில் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், மிகக் குறுகிய காலத்தில்  5ஜி சேவைகள் 80 சதவீதம் பேரை கவரும் வகையில் துவக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அதற்கு முன்னதாக,  5ஜி சேவைகளை துவக்குவதற்கு தயாராக இருக்கும்படி சேவை நிறுவனங்களுக்கு அறிவுறுத்திருந்தார்.

இதுகுறித்து, மத்திய அரசின், தேசிய அகண்ட அலைவரிசை இயக்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், 

"இந்தியாவின் டிஜிட்டல் பரிமாற்றம் மற்றும் இணைப்பு ஆகியவற்றை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் வகையில், அக்.1ல் டில்லியில் நடக்கும் இந்திய மொபைல் மாநாட்டில் 5ஜி சேவையை பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளார்.

5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் கிடைக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5G network prime minister released on oct., 1st


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->