லண்டனில் தேவாலயத்திற்கு அருகே துப்பாக்கிச் சூடு - சிறுமிகள் உட்பட 6 பேர் காயம் - Seithipunal
Seithipunal


லண்டனில் தேவாலயத்திற்கு அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் சிறுமிகள் உட்பட ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

லண்டனில் இறுதிச் சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த புனித அலோசியஸ் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவ  தேவாலயத்திற்கு அருகே நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் அவ்வழியாக சென்ற காரில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் சிறுமிகள் உட்பட ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

இதையடுத்து இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் 7 வயது சிறுமி ஆபத்தான நிலையில் மத்திய லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மேலும் 12 வயது சிறுமி, 21, 48, 54 மற்றும் 41 வயதுடைய நான்கு பெண்களும் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

6 injured in shooting in near London church


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->