நியூசிலாந்தில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.!
6 point magnitude earthquake hit newzealand
நியூசிலாந்தின் லோயர் ஹட் பகுதியில்களில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது என்று ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது வெலிங்டனுக்கு அருகிலுள்ள லோயர் ஹட்டிலிருந்து வடமேற்கே 78 கிலோமீட்டர் தொலைவிலும், 48 கிலோமீட்டர் ஆழத்திலும் ஏற்பட்டது.
மேலும் பராபரமுவிலிருந்து வடமேற்கே 50 கிமீ தொலைவில் மையம் கொண்டிருந்த இந்த நடுக்கத்தின் தாக்கம் நியூசிலாந்தின் வடக்குத்தீவு பகுதிகளிலும், மார்ல்பரோ மண்டலத்திலும் உணரப்பட்டது. இதனால் பீதியடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்புக்காக சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதங்கள் அல்லது பொருள் சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
English Summary
6 point magnitude earthquake hit newzealand