நன்கொடை வழங்கும் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் - 78 பேர் பலி - Seithipunal
Seithipunal


மேற்காசிய நாடான ஏமனில் கடந்த 2014ஆம் ஆண்டு மத்திய ஆட்சி கவிழ்க்கப்பட்டு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஈரான் ஆதரவுடன் ஆட்சியை கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், மக்கள் மற்றும் அரசு ஆதரவு படையினருக்கும் கடும் போர் நிலவியது.

மேலும் இந்த உள்நாட்டு போரில் 150000 உயிரிழந்ததாகவும், நாடு முழுவதும் பஞ்சம் மற்றும் வேலைவாய்ப்பின்மை சூழல் நிலவி வருவதாகவும் ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஏமன் தலைநகரில் வணிகர்கள் சிலர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்கொடை வழங்குவதாக முடிவு செய்திருந்தனர். இதற்காக 600க்கும் மேற்பட்டோர் ஏமன் தலைநகர் சனாவில் உள்ள பள்ளியில் கூடியிருந்தனர்.

இதைத்தொடர்ந்து கூட்டத்தை முறைப்படுத்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கியால் வான்நோக்கி சுட்டதில் மக்கள் பீதி அடைந்து நாலாபுறமும் ஓடினர். மேலும் பள்ளியின் வாசல் கதவு மூடப்பட்டதால் மக்கள் கூட்டமாக சுவரின் மீது ஏறி தப்ப முயன்றனர். இதனால் பள்ளியில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இதையடுத்து கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 78 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 13 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன..மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 2 நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கைது செய்யப்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

78 died in stampede during charity event in yemen


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->