கி.பி. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த வணிக கப்பல் இஸ்ரேலில் கண்டுபிடிப்பு...! - Seithipunal
Seithipunal


ஏறத்தாழ 1,200 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த விபத்தில் சிக்கி, கடலில் மூழ்கிய பழமையான கப்பல் ஒன்றின் பாகங்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். 

அண்மையில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இஸ்ரேல் கடற்கரையில் ஒரு கப்பலைக் கண்டுபிடித்துள்ளனர். அந்தக் கப்பல் சுமார் 1,200 ஆண்டுகள் மிகப் பழமையான கப்பல் ஆகும். இந்தக் கப்பல் ஒரு வணிகக் கப்பல் என்று நம்பப்படுகிறது. 

இஸ்ரேல் கடலில் உள்ள கப்பல், கி.பி 7 அல்லது 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும், அந்த கப்பல் சுமார் 25 மீட்டர்  நீளம் கொண்டது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இது அப்பகுதியில் நடைபெற்ற மிக ஆழமான பெரிய கப்பல் விபத்து என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

அந்தக்காலத்தில் கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதி வரை தனது ஆதிக்கத்தை இஸ்லாமியக் குடியரசு நாடுகள் விரிவுபடுத்தியது என்பதை இந்தக் கப்பல் காட்டுகிறது. மத கலவரம், பதட்டங்கள் இருந்தபோதிலும் அந்த காலகட்டத்தில் வணிகம் இன்னும் செழித்து இருந்தது என்பதையும் இந்தக் கப்பல் காட்டுகிறது. 

மேலும் இந்தக் கப்பல் சைப்ரஸ், எகிப்து, துருக்கி மற்றும் வட ஆப்பிரிக்காவின் கடற்கரை உட்பட மத்தியதரைக் கடல் பகுதி முழுவதிலும் இருந்து அந்த கப்பல் பொருட்களை எடுத்துச் சென்று வணிகம் நடைபெற்றது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். கடலில் ஆழ்கடல் நீந்துபவர்கள் இறங்கி இந்தக் கப்பலின் பழங்கால இடிபாடுகளில் இருந்து கலைப்பொருட்களை மீட்டனர். 

அதில் இருந்த 200 ஜாடிகளைக் கண்டுபிடித்தனர். அந்த ஜாடிகளில் அக்காலத்தில் கொண்டுசெல்லப்பட்ட பல்வேறு உணவுகள் மீன் சாஸ், பல வகையான ஆலிவ்கள், பேரீச்சம்பழங்கள் மற்றும் அத்திப்பழங்கள் உட்பட இன்னும் உள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

8th century merchant ship invented in isrel sea


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->