"நிர்வாணமாக பார்த்தே பயப்டல.. இப்போ பயமா.?" டிரம்ப் பற்றி நடிகை தாக்கு.! - Seithipunal
Seithipunal


கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று  2017 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராக பதவி வகித்தவர் டொனால்ட் ட்ரம்ப். இவர் பாலியல் புகார்களில் சிக்குவது வாடிக்கையான ஒன்று. பத்துக்கும் அதிகமான பெண்கள் இவர் மீது பாலியல் புகார் சுமத்தியுள்ளனர். 

இந்நிலையில், ஆபாச பட நடிகை ஒருவருடன் டிரம்ப் உறவிலிருந்த சம்பவம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. 76 வயதான டொனால்ட் ட்ரம்ப் ஆபாச பட நடிகையான ஸ்டோர்மி டேனியல் என்பவருடன் முறையற்ற உறவில் இருந்தார். இவர்களது உறவு தொடர்பாக அந்த நடிகை தான் வெளியிட்ட புத்தகத்திலும் குறிப்பிட்டிருந்தார். 

மேலும் 2016 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலின் போது இவர்கள் இருவரும் ஒன்றாகயிருந்த புகைப்படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த சம்பவத்தை மறைப்பதற்காக டிரம்ப் அந்த நடிகைக்கு  தேர்தல் பிரச்சார நிதியிலிருந்து 1,30,000/- அமெரிக்க  டாலர்களை அந்த நடிகைக்கு பரிசாக கொடுத்ததாக புகார் எழுந்தது. இந்தப் பணம் சட்ட விரோதமாக கொடுக்கப்பட்டதாக அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. 

இந்த வழக்கு மான்ஹாட்டன் நீதிமன்ற அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. நடிகையுடன் முறையற்ற உறவிலிருந்து மறைப்பதற்காக எழுந்த புகாரின் பேரில்  மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிபராகயிருந்த ஒருவரின் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படுவது அமெரிக்க வரலாற்றில் இதுதான் முதல் முறை.. இந்த வழக்கு தொடர்பாக அவர் கைது செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், டிரம்பின் ஆதரவாளர்கள் நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸூக்கு மிரட்டல் எடுத்ததாக கூறப்படுகிறது. இது பற்றி பேசிய நடிகை, "டொனால்ட் டிரம்பை பார்த்து எனக்கு ஒன்றும் பயமாக இருக்காது. அவரை நிர்வாணமாக பார்த்து பயப்படவில்லை. ஆடையுடன் பார்த்து நான் பயந்து விடுவேனா? அவர் நிறைய கலவரங்களை ஏற்படுத்தியவர். அவர் கைதாகினால் மீண்டும் வன்முறை தலை தூக்க கூடும்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress about Donald Trump 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->