ஆப்கானிஸ்தானில் தொடர் நிலநடுக்கம்: சோகத்தில் மக்கள்! - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தானில் இன்று காலை 5.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காலை 7.35 மணியளவில் 120 கிலோமீட்டர் ஆழத்தில் 5.2 ரிக்டர் அலகுகளாகப்  பதிவாகியுள்ளது. 

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிர் சேதம் அல்லது பொருள் சேதம் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. இதற்கு முன்னதாக கடந்த அக்டோபர் 7ஆம் தேதி ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டு 4000 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். 

பின்னர் நேற்று முன்தினம் 4.8 ரிக்டர் அளவிலும் நேற்று 4.4 ரிக்டர் அளவிலும் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

அடுத்தடுத்து தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் ஆப்கானிஸ்தான் மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Afghanistan earthquakes 5 Richter


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->