அடுத்தடுத்து அதிரவைத்த நிலநடுக்கம் - பீதியில் பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள இந்துகுஷ் பிராந்தியத்தை மையமாக கொண்டு நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 241 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஆப்கானிஸ்தான் தேசிய நிலஅதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இந்தியாவில் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களிலும் அதிர்ந்துபோனது. 

அதிலும் குறிப்பாக நாட்டின் தலைநகர் டெல்லியில் நிலநடுக்கத்தின் தாக்கம் கடுமையாக உணரப்பட்டது. மேலும், காஷ்மீர், பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் மக்கள் நிலஅதிர்வை உணர்ந்தனர். 

இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலை 4.51 மணிக்கு மீண்டும் ரிக்டர் அளவில் 4.3 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு கட்டிடங்கள் லேசாக அதிர்வை கண்டது. அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் இந்த நிலநடுக்கங்களால் ஆப்கானிஸ்தான் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

again earthquake in afganisthan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->