ஆப்கானிஸ்தானை அதிரவிடும் நிலநடுக்கம் - அச்சத்தில் பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தானை அதிரவிடும் நிலநடுக்கம் - அச்சத்தில் பொதுமக்கள்.!

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் நாட்டின் வடமேற்கில் 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஹெராட் மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இது 6.3 ஆக பதிவானது.

இதன் தொடர்ச்சியாக 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் கட்டிடங்கள், வீடுகள் இடிந்து தரை மட்டமானது. அதில் இருந்தவர்கள் என்ன நடந்தது என்பது பற்றி அறியாமலேயே மண்ணோடு மண்ணாக இடிபாடுகளுக்குள் இடையில் சிக்கி பல ஆயிரக்கணக்கான மக்கள் பலியானார்கள்.

இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் இன்று மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில், இன்று காலை 9.06 மணிக்கு ரிக்டர் அளவில் 6.2 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 9. 20 மணிக்கு 5.4 என்ற அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கத்தால் என்ன பாதிப்பு ஏற்பட்டது என்ற தகவல் வெளியாகவில்லை. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆப்கானிஸ்தான் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் பத்துக்கும் மேற்பட்ட முறை ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

again earthquake in afghanisthan


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->