மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும்! இலங்கை முன்னாள் அதிபர்.! - Seithipunal
Seithipunal


இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் என்று முன்னாள் அதிபர் சிறிசேனா வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் தற்போது மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் விலையும் விண்ணை தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் இலங்கை அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மேலும் இலங்கை அதிபர் மற்றும் பிரதமர் இருவரும் பதவி விலக வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வரும் நிலையில், நேற்று பொலனருவா பகுதியில் நடைபெற்ற மே தின சிறப்பு விழாவில் கலந்து கொண்ட முன்னாள் அதிபர் சிறிசேனா, பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இலங்கையில் மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Again election should be held in srilanka


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->