ஊழியர்கள் வேலை நிறுத்தம், 150க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து !!
airplanes services stopped due to strike
கனடா நாட்டின் இரண்டாவது பெரிய விமான நிறுவனமான WestJet நிறுவனத்தின் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் விமான ஊழியர்கள் சங்கத்தின் வேலைநிறுத்தம் காரணமாக நேற்று அந்த நிறுவனத்தின் குறைந்தது 150 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விமான நிறுவனம் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாததே வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்கான காரணம் என்று விமான ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த நிறுவனத்தில் வேலைநிறுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதி, மத்தியஸ்தத்துக்கு முக்கியத்துவம் அளித்து பேச்சுவார்த்தை நடத்தும்படி, அந்நாட்டு அமைச்சர்கள் குழு உத்தரவு அளித்துள்ளது. விமான ஊழியர்கள் சங்கத்தின் வேலைநிறுத்தம் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் அந்த நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட இரண்டு வாரம், விமான நிறுவனத்திற்கும் மற்றும் அதன் ஊழியர்களுக்கும் நடந்த விவாதங்களுக்குப் பிறகு, விமான நிறுவனத்திற்கும் தொழிற்சங்கத்திற்கும் இடையே ஒரு புதிய ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகும், வேலை நிறுத்தத்தை முடிவுக்கு வர, அரசாங்கம் கட்டாய மத்தியஸ்தத்திற்கான மந்திரி ஆணையை வெளியிட்டது.
ஆனால் பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த விமான நிறுவனம் விருப்பம் தெரிவிக்காததால் வேலை நிறுத்தம் தவிர்க்க முடியாததாக மாறியதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதாக தொழிற்சங்கம் உறுதிப்படுத்தியுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
கனடா நாட்டின் இரண்டாவது பெரிய விமான நிறுவனமான வெஸ்ட்ஜெட் ஊழியர்களின் திடீர் வேலைநிறுத்தம் அந்நாட்டு மக்களின் வார இறுதியை பாழாக்கியுள்ளது. சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களில் வார இறுதி நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். வெஸ்ட்ஜெட் விமான நிறுவனம் இந்த வேலைநிறுத்தம் தேவையற்ற மன அழுத்தத்தையும் இழப்பையும் ஏற்படுத்தியதால் தொழிற்சங்கத்தை முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும் என தொழிற்சங்கத்திற்கும் வலியுறுத்தி உள்ளது. விமான ஊழியர்களின் திடீர் வேலைநிறுத்தத்தால் விமான நிறுவனம் மட்டுமல்லாமல் மக்களும் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
English Summary
airplanes services stopped due to strike