நவீன இயற்பியலின் தந்தை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்ததினம்!
Albert Einstein the father of modern physicswas born
"நவீன இயற்பியலின் தந்தை"
திரு.ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்கள் பிறந்ததினம்!.
20ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த இயற்பியல் விஞ்ஞானி, நவீன இயற்பியலின் தந்தை என வர்ணிக்கப்பட்ட ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 1879ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்தார்.
இவர் காப்புரிமை அலுவலகத்தில் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளை ஆராய்ந்து மதிப்பீடு செய்பவராக பணியாற்றினார். அதுவே ஆராய்ச்சிகளில் ஈடுபட இவருக்கு உந்துதலாக அமைந்தது.
இயந்திரவியல், அணுக்கள், ஒளிமின் விளைவு, ஈர்ப்பு விசை உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். நியூட்டனின் விதிகளை ஆராய்ந்தபோதுதான், இவரது உலகப் புகழ்பெற்ற 'சார்பியல் கோட்பாடு' பிறந்தது.
குவாண்டம் இயந்திரவியல், புள்ளியியல் இயந்திரவியல், அண்டவியல் துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியுள்ளார். பல நூல்களை எழுதியுள்ளார்.

ஒளிமின் விளைவைக் கண்டறிந்து விளக்கியதற்காகவும், கோட்பாட்டு இயற்பியலில் இவரது பங்களிப்புக்காகவும் 1921ஆம் ஆண்டு இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இவர் 'அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும் மனிதகுல நன்மைக்கே பயன்பட வேண்டும்' என்று உறுதியாக கூறினார். ஆனால், இவரது கோட்பாடுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அணுகுண்டுவை நினைத்து வேதனைக்கு ஆளானார். இவர் தனது 76வது வயதில் 1955, ஏப்ரல் 18 ஆம் தேதி அன்று மறைந்தார்.
English Summary
Albert Einstein the father of modern physicswas born